dark_mode
Image
  • Sunday, 24 August 2025
அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 6 பேர் கொண்ட அதிமுக வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியலை வெளியாகியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

இதில் பெரும்பாலான கட்சிகள் தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டு நேர்காணலை நடத்தி வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக இடம்பெற்றுள்ளது.

தேமுதிக - அதிமுக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில் 6 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

அதில் போடிநாயக்கனூரில் ஓபிஎஸ்ஸும், எடப்பாடியில் பழனிச்சாமியும், ராயபுரத்தில் ஜெயக்குமாரும், விழுப்புரம்

சிவி சண்முகமும், ஸ்ரீவைகுண்டத்தில் எஸ் பி சண்முகநாதனும், நிலக்கோட்டை தனி தொகுதியில் எஸ் தேன்மொழியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

related_post