
அஇஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு
அஇஅதிமுக தலைமையிலான கூட்டணியில், பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதே போல், 6.4.2021 அன்று இடை தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளருக்கு, அஇஅதிமுக கழகம் தனது முழு ஆதரவை அளிக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொடர் இழுப்பறிக்கு பின்னர் இந்த ஒப்பந்தம் இரு கட்சிகளுக்கிடையே உறுதி செய்யப்பட்டுள்ளது.