dark_mode
Image
  • Wednesday, 08 October 2025
வங்கிகள் தனியார் மயமாக்கல்  நிர்மலா சீதாராமன் விளக்கம்..!

வங்கிகள் தனியார் மயமாக்கல் நிர்மலா சீதாராமன் விளக்கம்..!

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்திய நிலையில் எல்லா பொதுத்துறை வங்கிகளுமே தனியார் மயமாக்கப்படாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு பட்ஜெட்டின் போது அறிவித்திருந்தது . அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த இரண்டு நாட்களாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து மக்களின் சேமிப்பு பணம் வங்கிகளில் இருப்பதாகவும், அவற்றை தனியாருக்கு விற்பது நியாயமற்றது எனவும் வங்கி ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர். ஊழியர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதோடு , பணியில் இடஒதுக்கீடு முறையும் மறுக்கப்படும் என வங்கி ஊழியர் சங்கத்தினர் குற்றச்சாட்டினர்.

இந்நிலையில் வங்கிகள் தனியார்மயமாக்கல் குறித்து மத்திய நிதி அமசைசர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். அதில் தனியார்மயமாக்குவது என்ற முடிவு திட்டமிட்ட ஒன்று தான் என்றும், எல்லா பொதுத்துறை வங்கிகளுமே தனியார்மயமாக்கப்படாது என தெரிவித்தார்.

தனியார் வசம் தரப்படும் வங்கிகளைப் பொறுத்தவரையில், அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரின் நலனும் காக்கப்படும் என்றும் எந்தச் சூழலிலும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார்.

related_post