
ரோஜர் பெடரரின் சாதனையை தகர்த்த ஜோகோவிச்..!
டென்னிஸ் விளையாட்டு உலகில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வருகிறார் செர்பியாவின் ஜோகோவிச். ATP டூர் டென்னிஸ் ரேங்கிங்கில் 311 வாரங்களுக்கு நம்பர் ஒன் வீரராக இருந்ததன் மூலம் ரோஜர் பெடரரின் சாதனையை முறியடித்துள்ளார்.
இதற்கு முன்னதாக சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 310 வாரங்கள் வரை சர்வதேச டென்னிஸ் ரேங்கிங்கில் முதலிடம் பிடித்து நம்பர் ஒன் வீரராக இருந்துள்ளார். தற்போது அதை சாதனையை தகர்த்துள்ளார் ஜோகோவிச்.
ஆஸ்திரேலிய ஓபனில் 9 முறையும், விம்பிள்டன் சம்பியன்ஷிப்பை 5 முறையும், அமெரிக்க ஓபனை 3 முறையும், பிரெஞ்சு ஓபனில் ஒரு முறையும் பட்டம் வென்றுள்ளார் ஜோகோவிச்.