dark_mode
Image
  • Wednesday, 08 October 2025

ஆசிய கோப்பை: பாகிஸ்தானை பந்தாடிய அபிஷேக் ஷர்மா - கில் ஜோடி.. மீண்டும் கைகுலுக்க மறுப்பு..

ஆசிய கோப்பை: பாகிஸ்தானை பந்தாடிய அபிஷேக் ஷர்மா - கில் ஜோடி.. மீண்டும் கைகுலுக்க மறுப்பு..
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில், இந்திய அணி மிக எளிதாக வெற்றி பெற்றது. 
 
 
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக, தொடக்க ஆட்டக்காரர் பர்ஹான் 58 ரன்கள் எடுத்தார். இந்திய பந்துவீச்சாளர்களில், சிவம் துபே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
172 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, அபாரமான தொடக்கத்தை அளித்தது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடி, 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் குவித்தார். அவருக்கு உறுதுணையாக, சுப்மன் கில் 8 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்தார்.
 
 
கடைசி நேரத்தில், திலக் வர்மா 19 பந்துகளில் 30 ரன்கள் குவித்து, அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 18.5 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தனது சூப்பர் 4 பயணத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. அடுத்ததாக இந்திய அணி புதன்கிழமை வங்கதேசத்துடனும், வெள்ளிக்கிழமை இலங்கை அணியுடனும் மோத உள்ளது.

முன்னதாக டாஸ் போட்டவுடன் இந்திய அணியின் கேப்டன் மீண்டும் கைகுலுக்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
 

related_post