பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா.. 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.. குல்தீப் யாதவ் ஆட்டநாயகன்..!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சாளர்களை தாக்கு பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. பர்கான் மட்டுமே ஓரளவு நிலைத்து ஆடி 42 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல் மற்றும் பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனை அடுத்து, 128 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா அபாரமாக தொடக்கம் கொடுத்தார். அவர் 13 பந்துகளில் 31 ரன்கள் அடித்தார். கேப்டன் சூர்யா குமார் யாதவ் பொறுப்பாக விளையாடி 47 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஆட்டத்தை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா ஏற்கனவே ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.