dark_mode
Image
  • Sunday, 24 August 2025
ரிஷப் பந்த் சதம், இங்கிலாந்தை விட இந்தியா 89 ரன்கள் முன்னிலை

ரிஷப் பந்த் சதம், இங்கிலாந்தை விட இந்தியா 89 ரன்கள் முன்னிலை

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 வது டெஸ்ட் போட்டி உலகிலேயே பெரிய மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.


டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் பவுலிங்கில் அசத்திய அக்சர் படேல் 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும், சிராஜ் 2 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 4வது போட்டியில் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி துவக்க வீரர்களாக ரோகித் சர்மா -சுப்மன் கில் களமிறங்கினர். பின்னர், ஆண்டர்சன் பந்துவீச்சில் சுப்மன் கில் டக் அவுட் ஆன நிலையில், அடுத்ததாக களமிரங்கிய புஜாரா சிறிது நேரத்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து வந்த கேப்டன் விராட் கோலியும் டக் அவுட் ஆனார். ரகானேவும் 27 ரன்களில் வெளியேறினார்.

தொடர்ந்து ஆடி வந்த இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் 294 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் முன்னிலை வகித்தது. ரிஷப் பந்த் சதமடித்து 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் தனது 3 வது டெஸ்ட் அரைசதத்தை அடித்தார். தற்போது வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

ஐ.சி.சியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற 4வது டெஸ்ட் மிக முக்கியான ஒன்றாக பார்க்கப்படுகிறது. தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள இந்திய அணி, ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இன்று நடக்கும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் அல்லது போட்டியை சமன் செய்ய வேண்டும். அதே நேரத்தில் இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்ய வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளது.

related_post