
மீண்டும் ஊரடங்கு அமலா?...மாநில முதல்வர்களுடன் 17-ல் பிரதமர் மோடி ஆலோசனை
இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 1,13,85,339 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,10,07,352 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1,58,725 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,19,262 பேர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது