dark_mode
Image
  • Sunday, 24 August 2025
நில ஆக்கிரமிப்பை நிரூபித்தால் நாட்டைவிட்டு வெளியேற தயார்:-சத்குரு ஜக்கி வாசுதேவ்

நில ஆக்கிரமிப்பை நிரூபித்தால் நாட்டைவிட்டு வெளியேற தயார்:-சத்குரு ஜக்கி வாசுதேவ்

கோவையில் ஈஷா யோகா மையம் அமைந்திருக்கும் இடத்தில் உள்ள வனப்பகுதியில் ஒரு இஞ்ச் நிலத்தை தான் ஆக்கிரமித்திருப்பதாக நிரூபத்தால் நாட்டைவிட்டு நான் வெளியேறத் தயார் என சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

தமிழக கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்தொடு சத்குரு ஜக்கி வாசுதேவ் 'கோவில் அடிமை நிறுத்து இயக்கம்' என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். இந்த இயக்கம் குறித்து சென்னையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சத்குருவும், நடிகர் சந்தானமும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, கோவில்களை மீட்பது குறித்து சத்குரு போட்ட ட்வீட் தனக்கு சரி என தோன்றியதாக சந்தானம் கூறினார். அவர் எழுப்பிய கேள்விகளுக்கு சத்குரு பதிலளித்தார். அப்போது, முதலில் கோவில் கட்டிவிட்டு பின்பு ஊர்கட்டுவோம் என சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.
கோவில்களை விட அரசு அதிகமாக சாராயக்கடைகளை வைத்துள்ளதாகவும், கோவில்களின் தற்போதைய நிலையை பார்த்தால் தமக்கு கண்ணீர் வருவதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே கோவில்களில் பூஜை செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளதாகக் கூறுவது உண்மையல்ல என்றும் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.

related_post