dark_mode
Image
  • Thursday, 05 February 2026

தூய்மை காவலர்களுக்கான மதிப்பூதியம் உயர்வு.. தமிழ்நாடு அரசு அரசாணை..!

தூய்மை காவலர்களுக்கான மதிப்பூதியம் உயர்வு.. தமிழ்நாடு அரசு அரசாணை..!

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணிபுரியும் தூய்மை காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களின் மாதாந்திர மதிப்பூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

தற்போது தூய்மை காவலர்கள் பெற்று வரும் 5,000 ரூபாய் ஊதியம், இன்றைய விலைவாசிக்கு குடும்பம் நடத்தப் போதுமானதாக இல்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

 

இதனை கருத்தில் கொண்டு, அவர்களின் மதிப்பூதியத்தை 6,000 ரூபாயாக உயர்த்தி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்விற்காக ஆண்டுக்கு கூடுதலாக 417 கோடி ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

அரசின் இந்த முடிவால் தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தூய்மை காவலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூய்மை காவலர்களுக்கான அர்ப்பணிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

related_post