dark_mode
Image
  • Sunday, 24 August 2025
தேர்தல் குழுவினர் வாகனச் சோதனை: கடலூரில் ரூ.51 லட்சம், பட்டுப்புடவைகள் பறிமுதல்

தேர்தல் குழுவினர் வாகனச் சோதனை: கடலூரில் ரூ.51 லட்சம், பட்டுப்புடவைகள் பறிமுதல்

கடலூரில் காரில் எடுத்து சென்றரூ. 51 லட்சம் மற்றும் பட்டுப்புட வைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடலூர் ஆல்பேட் சோதனைச் சாவடி அருகே நிலையான கண் காணிப்பு குழுவினர் கோட்டகலால் தனி வட்டாட்சியர் கலாவதி தலைமையில் நேற்று வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த காரை சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 51 லட்சம் எடுத்து செல்வது தெரியவந்தது. காரில் வந்த ராம்நாத்பிரசாத் என்பவர் கடலூர் சிப்காட் பகுதியில் தனக்கு தொழிற்சாலை உள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக பணம் எடுத்து செல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து பறக்கும் படையினர் ரூ. 51 லட்சத்தை பறிமுதல் செய்துகடலூர் வட்டாட்சியர் பலராமனிடம் ஒப்படைத்தனர்.

இது போல கடலூர் அருகே சின்ன கங்கனாகுப்பம் பகுதியில் வட்டார புள்ளியல் அலுவலர் நாராயணன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த காரில் ஆந்திரா மாநிலம் ஹரிப்பூரை சேர்ந்த சதீஷ் (52) என்பவர் ரூ.1 லட்சத்து 56 ஆயிரம் மதிப்புள்ள 90 பட்டுப்புடவைகள் உரிய ஆவணங்கள் இன்றி இருந் தது.

இதையடுத்து புடவைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

கள்ளக்குறிச்சியில் ரூ.4 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட மாடூர் டோல்கேட் அருகே தேர்தல் நிலை யாணை தடுப்புக் குழுவினர் நேற்றுவாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த சிறிய லாரியை மடக்கி சோதனை செய்த னர். வாகன ஓட்டுநரிடம் ரூ.4 லட்சம்ரொக்கம் இருப்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர் அவரிடம் விசாரித் ததில், அவர் சங்கராபுரத்தை அடுத்தவிரியூர் கிராமத்தைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் என்பது தெரிய வந்தது. அவர் வைத்திருந்த பணத்திற்கு எவ்வித ஆவணமும் இல்லாததால் அதனை பறிமுதல் செய்த குழுவினர் கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் பிரபாகரனிடம் ஒப்படைத்தனர்.

related_post