dark_mode
Image
  • Monday, 08 December 2025
தாப்ஸி, அனுராக் இல்லங்களில் வருமான வரி சோதனை: ராகுல் விமர்சனம்

தாப்ஸி, அனுராக் இல்லங்களில் வருமான வரி சோதனை: ராகுல் விமர்சனம்

நடிகை தாப்ஸி, ஹிந்தி திரைப்பட இயக்குநா் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் வருமானவரி சோதனை நடத்தப்படுவது குறித்து பாஜகவை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ''வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வு அமைப்புடன் இணைந்து மத்திய அரசு இதனை செய்து வருகிறது.

விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்புபவர்களின் இல்லங்களில் பாஜக வருமானவரி சோதனை நடத்துகிறது'' என்று விமர்சித்துள்ளார்.

இதேபோன்று வருமானவரி சோதனை குறித்து ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வினி யாதவ் பாஜகவை விமர்சித்துள்ளார்.

''மத்திய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை, வருமான வரித்துறைகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. சர்வாதிகாரியாக செயல்படுவதால், தங்களுக்கு எதிராக கருத்துகளை பாஜக காதுகொடுத்து கேட்பதில்லை'' என்றும் குற்றம் சாட்டினார்.

related_post