
கொரோனா அதிகரிப்பு நடவடிக்கை வடமாநில பெருநகரங்களில் இரவு ஊரடங்கு அமல் ..!
மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களின் முக்கிய நகரங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பால் மார்ச் 31 வரை இரவு ஊரடங்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்தியாவில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிட்டாலும் சில நகரங்களில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து குஜராத் மாநில அரசு தலைநகர் அகமதாபாத் மற்றும் வதோதரா, சூரத், ராஜ்கோட் ஆகிய நகரங்களுக்கு நாளை (மார்ச் 17) முதல் இம்மாத இறுதி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.அதன்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வணிக நிறுவனங்கள், கடைகள், ஹோட்டல்கள், மால்கள் இயங்காது. மருந்து கடைகள், மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.மேலும், சூரத்தில் பணியாற்றும் ஜவுளி மற்றும் வைர தொழிலாளர்களுக்கு வாரம் ஒரு முறை கொரோனா பரிசோதனை தேவை என நகராட்சி அறிவித்துள்ளது. அங்கு தான் அதிகம் பேரிடம் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் இந்நடவடிக்கை என கூறியுள்ளது.போபால், இந்துாரில் இரவு ஊரடங்கு இதுமட்டுமின்றி மத்திய பிரதேச தலைநகர் போபால் மற்றும் இந்தூர் நகரங்களிலும் இரவு ஊரடங்கு நாளை முதல் அமலாகிறது. ஜபல்பூர், குவாலியர், உஜ்ஜைன் உள்ளிட்ட 8 நகரங்களில் 10 மணிக்குள் கடைகளை அடைக்க உத்தரவு போட்டுள்ளனர். ஆனால் அந்நகரங்களில் ஊரடங்கு கிடையாது. மஹாராஷ்டிராவில் இருந்து வந்தால் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.