
ஐபிஎல்-காக முதல் ஆளாக தோணி செய்யும் செயல்.! கடுமையான திட்டத்தில் சென்னை அணி.!
இந்தியாவில் 14வது ஐபிஎல் சீசன் துவங்க இருக்கிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத் போன்ற 6 இடங்களில் போட்டிகள் நடத்த பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அகமதாபாத்தில் பிளே ஆப் போட்டிகள் நடத்த இருப்பதாக தெரிகிறது.
முதல் முறையாக கடந்த சீசனில் சென்னை அணி லீக் சுற்றுடன் தோல்வியுற்றது. இந்த முறை எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்று சிஎஸ்கே அணி தயாராகி வருகிறது. சமீபத்தில் மொயின் அலி, புஜாரா ஆகிய வீரர்கள் ஏலத்தில் சென்னை அணிக்காக வாங்கப்பட்டனர்.
வரும் 11ஆம் தேதி 14வது சீசனுக்கான பயிற்சி முகாம் சென்னையில் துவங்க உள்ளது. இது குறித்து, சென்னை அணியின் முக்கிய நிர்வாகி ஒருவர், "பயிற்சி விரைவில் துவங்க உள்ளது உண்மைதான் .கேப்டன் தோனி பயிற்சியை முதல் நாளிலிருந்தே துவங்குகிறார். இதற்காக விரைவில் சென்னை வருகிறோம்.
மற்றவர்களும் விரைவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒரு பிரச்சினையும் இல்லை. ஏற்கனவே, இருக்கும் பாதுகாப்பு வளையத்திற்குள் அனைத்தும் செயல்படும். இப்போதைக்கு கூடுதல் பாதுகாப்பு எதுவும் தேவை இல்லை. அனைத்து வீரர்களுக்கும் நிச்சயம் பரிசோதனை செய்யப்படும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.