
ஐபிஎல் 2021: சென்னையில் முதல் போட்டி
14வது இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் லீக் (ஐபிஎல்) போட்டிகள் வரும் ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடங்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து போட்டிகளும் நடைபெற்றன.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 9-ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
முதற்கட்டமாகப் பார்வையாளர்கள் அற்ற நிலையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என்றும் போட்டிகள் செல்ல செல்ல பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.