dark_mode
Image
  • Sunday, 24 August 2025
உலகளவிலான வளர்ச்சியில் இந்தியாவுக்கு 5வது இடம்

உலகளவிலான வளர்ச்சியில் இந்தியாவுக்கு 5வது இடம்

உலகளவில் வளர்ச்சிக்கான இடமாக இருப்பதில் இந்தியா, 5வது இடத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.'பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்' நிறுவனம், உலகளவில், 100 நாடுகளை சேர்ந்த, 5,050 தலைமை செயல் அதிகாரிகளிடம் எடுத்த கருத்துக்கணிப்பின் மூலம் இது தெரிய வந்துள்ளது.கருத்துக் கணிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:அடுத்த, 12 மாதங்களில், அதிக வளர்ச்சி காணும் நாடுகள் வரிசையில், அமெரிக்கா முதல் இடத்தையும்; சீனா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.ஜெர்மனி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. நான்காவது இடத்தில் இருந்த இந்தியாவை பின்னுக்குத் தள்ளி, அந்த இடத்துக்கு, பிரிட்டன் முன்னேறி இருக்கிறது. இதனையடுத்து, இந்தியா ஒரு இடம் தாழ்ந்து, ஐந்தாவது இடத்துக்கு வந்துள்ளது.ஜப்பான், ஆறாவது இடத்தில் உள்ளது.நடப்பு ஆண்டில், பொருளாதாரம் வளர்ச்சி காணும் என ஆய்வில் பங்குகொண்டோரில், 76 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். இவ்வாறு, கருத்து கணிப்பு குறித்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

related_post