
இவர்களுக்கும் இனி கட்டாயம் நீட் தேர்வு
நாடு முழுவதும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
தமிழகம் நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வை திணித்து மத்திய அரசு மாணவர்களை தண்டிக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு தமிழக அரசு வழங்கிய 7.5% இடஒதுக்கீடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடைபெற இருப்பதாக தகவல் வெளியான நிலையில், ஒரு முறை தான் என்று தேசிய தேர்வுகள் முகமை விளக்கம் அளித்தது.
இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 மொழிகளில் தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடைபெற்று வந்த நிலையில் இனி பி.எஸ்.சி நர்சிங், சித்த மருத்துவம், ஆயுர் வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கும் நீட் தேர்வு அவசியம் என தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு முதல் பி.எஸ்சி நர்சிங், பி.எஸ்சி லைஃப் சயின்ஸ் படிப்புகளுக்கும் நீர் தேர்வு முடிவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கே நீட் தேர்வு கூடாது என வலியுறுத்தி வரும் நிலையில் பி.எஸ்சி நர்சிங், பி.எஸ்சி லைஃப் சயின்ஸ், சித்த மருத்துவம், ஆயுர் வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கும் நீட் தேர்வு அவசியம் என்று கூறியிருப்பது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.