dark_mode
Image
  • Sunday, 24 August 2025
இளநீர், நொங்கு, கரும்புசாறு விற்பனை அமோகம்..! குமரியில் வாட்டி, வதைக்கும் வெயில்.

இளநீர், நொங்கு, கரும்புசாறு விற்பனை அமோகம்..! குமரியில் வாட்டி, வதைக்கும் வெயில்.

குமரி மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வருவதால், வெப்பத்தின் பிடியில் இருந்து தப்புவதற்கான வழிகளை தேடி மக்கள் தவிக்கிறார்கள். ஏப்ரல், மே மாதங்களில் சுட்டெரிக்க வேண்டிய சூரியன், மார்ச் மாதமே வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. காடுகள் அழிப்பு, மரங்கள் வெட்டி சாய்ப்பு போன்ற பிரச்சினைகளால் குமரி மாவட்டத்திலும் சீதோஷ்ண நிலை தலைகீழாக மாறி விட்டது. வெயில் தென்படாத பகுதிகளிலும் இப்போது வழக்கத்துக்கு மாறாக சூரியன் சுட்டெரித்து வருகிறது.மாவட்டத்தின் வெப்ப அளவு உயர்ந்து பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

டந்த இரண்டு நாட்களாக குமரியில் பெய்த சாரல் மழையால் வெப்ப நிலை குறையும் என எதிர்பார்த்த நிலையில்,  எப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு வெப்பம் கடுமையாக உயர்ந்துள்ளது. சாலைகளில் நடக்க முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் உயர்ந்துள்ளது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கத்தினால் சாலைகளில் கானல் நீரை காணமுடிகிறது. பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்லாமல் வீட்டிற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இளநீர், நுங்கு, பதநீர், தர்பூசணி பழம், நுங்கு சர்பத், கரும்பு சாறு விற்பனை அதிகரித்துள்ளது. சாலை ஓரங்களில் உள்ள இந்த கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

குழந்தைகளும், பெரியவர்களும் குளிர்பான கடைகளை தேடி அலைகிறார்கள்.  மக்களின் தேவையை அறிந்து கொண்டு வியாபாரிகள் பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளனர். இளநீர் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. மார்ச் மாதமே இந்தளவுக்கு வெயில்  வாட்டி வதைப்பதால், ஏப்ரல், மே மாதங்களில் உச்ச கட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்து வருகிறது. முக்கடல் அணை நீர் மட்டம் 12 அடியாகி உள்ளது.  வெப்பத்தை சமாளிக்க வழி தெரியாமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

related_post