dark_mode
Image
  • Sunday, 24 August 2025
இன்று முதல் ஆட்டோ-டாக்ஸி கட்டணங்கள் உயர்வு.

இன்று முதல் ஆட்டோ-டாக்ஸி கட்டணங்கள் உயர்வு.

ஆட்டோ மற்றும் டாக்ஸியின் கட்டணங்கள் இன்று முதல் உயர்த்தப்படு நடைமுறைக்கு வந்துள்ளன.

மும்பை பெருநகரில் சுமார் 60 ஆயிரம் டாக்சிகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் 4.6 லட்ச ஆட்டோக்கள் ஓடுகின்றன. இதில் ஆட்டோவுக்கு குறைந்தபட்சம் ரூ.18, டாக்சிக்கு ரூ.22 என கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்டோ, டாக்சி கட்டணம் ரூ.3 உயர்த்தப்படுவதாக கடந்த வாரம் அரசு அறிவித்தது.

இதில் டாக்சி குறைந்தபட்ச கட்டணம் (1.5 கி.மீ. தூரம் வரை) ரூ.22-ல் இருந்து ரூ.25 ஆகவும், 1.5 கி.மீ. பிறகு ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.16.93-ம் பயணிகள் கட்டணமாக செலுத்த வேண்டும். இதேபோல ஆட்டோ கட்டணம் ரூ.18-ல் இருந்து ரூ.21 ஆகவும், 1.5 கி.மீ. பிறகு ஒவ்வொரு கி.மீ.க்கும் ஆட்டோவுக்கு ரூ.14.20-ம் கட்டணமாக செலுத்த வேண்டும், இரவு நேர டாக்சி, ஆட்டோ கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு நேற்று முதல் மும்பை பெருநகரில் அமலுக்கு வந்து உள்ளது. டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களை இயக்கும் ஓட்டுநர்கள் மார்ச் 31 க்குள் தங்கள் வாகனங்களில் மின்னணு நியாயமான மீட்டர்களை நிறுவ வேண்டும். அதுவரை அவர்கள் திருத்தப்பட்ட கட்டண அட்டையிலிருந்து அதிகரித்த கட்டணத்தை வசூலிக்க முடியும்.

related_post