
Valimai Update – வலிமை அப்டேட் கொடுத்த திருப்பூர் கலெக்டர், இணையத்தில் வைரலாக பரவும் பதிவு..!
தல அஜித் மற்றும் இயக்குனர் வினோத் கூட்டணியில் தற்போது உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் அடுத்த அப்டேட்டை எதிர்பார்த்து அஜித் ரசிகர்கள் ஒன்றரை வருடத்திற்கும் மேலாக காத்திருக்கிறார்கள்.
தற்போது அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரும் தொடர்ந்து வலிமை அப்டேட்டை கேட்டு வலிமை அப்டேட் என்னும் வார்த்தை இந்திய அளவில் ட்ரெண்டான வார்த்தையாகவே மாறியுள்ளது. அந்த வகையில் இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஒரு பதிவை போட்டுள்ளார்.
அதில் வலிமை அப்டேட் இதோ என கூறி, வரும் சட்டமன்ற தேர்தலுக்கான விழிப்புணர்வு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அதில் ஜனநாயகத்தின் வலிமை உங்கள் ஒவ்வொருவரின் ஓட்டிலும் உள்ளது என்னும் வாசகமும் உள்ளது. இந்த பதிவை தற்போது அஜித் ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்து வருகிறார்கள்.