dark_mode
Image
  • Thursday, 12 February 2026

Hospital மருத்துவமனையில் துரைமுருகன்.. அதிகாலையிலேயே விரைந்து வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Hospital மருத்துவமனையில் துரைமுருகன்.. அதிகாலையிலேயே விரைந்து வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின்!

திமுகவின் பொதுச் செயலாளரும் தமிழக அமைச்சருமான துரைமுருகன் உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்றைய தினம் (பிப்ரவரி 10 ஆம் தேதி) துரைமுருகன் தனது வீட்டில் இருக்கும் போது, தவறி விழுந்து அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் உடனடியாக மீட்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அங்கு அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் செய்தி அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிகாலையிலேயே அவரைக் காண அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். அங்கு நேரில் சென்று நலம் விசாரித்து விட்டு, மருத்துவர்களிடம் துரைமுருகனின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

இதற்கு முன்னதாக கடந்த ஆண்டின் இறுதியில், இதே மாதிரி உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

மூத்த அரசியல் தலைவரான துரைமுருகன், நீண்ட காலமாக அரசியலில் இருந்து வருகிறார். சீனியர் தலைவர்களில் ஒருவரான இவர், சமீப காலமாக வயதுமூப்பின் காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைவு பிரச்சினைக்கு தள்ளப்படுகிறார். அவருக்கு அவ்வப்போது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

related_post