dark_mode
Image
  • Saturday, 14 February 2026

AI வந்ததால் ஐடி நிறுவனங்களுக்கு அடி!.. Wipro, TCS, Infosys பங்குகள் கடும் வீழ்ச்சி!

AI வந்ததால் ஐடி நிறுவனங்களுக்கு அடி!.. Wipro, TCS, Infosys பங்குகள் கடும் வீழ்ச்சி!

சமீப காலமாகவே செயற்கை நுண்ணறிவு என சொல்லப்படும் AI மென்பொருள் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், டிவிட்டர், யுடியூப் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு சென்றாலே AI தொடர்பான பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்க்க முடிகிறது.

 

ஒருபக்கம் AI வந்து விட்டதால் எதிர்காலத்தில் சாப்ட்வேர் துறையில் மனிதர்களின் பயன்பாடுகள் குறையும் என சாப்ட்வேர் வல்லுநர்கள் எச்சரித்து வருகிறார்கள்.. இது அந்த துறையை நம்பி இருக்கும் இளைஞர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

 

இந்நிலையில்தான், AI தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் Wipro, TCS, Infosys, L&T போன்ற இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன. Nify IT பங்குகள் இதுவரை இல்லாத அளவுக்கு 5 சதவீத சரிவை சந்தித்திருக்கிறது..

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய கிளாவுட் AI -ன் அறிமுகத்தால் ஐடி நிறுவனங்கள் கதிகலங்கி போயிருக்கின்றன.. இந்நிறுவனங்களின் அவுட்சோர்சிங் சேவைகளை இந்த AI Chatbo-கள் துல்லியமாக செய்து முடித்து அதை நேரத்திற்கு தகுந்தவாறு மேம்படுத்தி தருவதால் மனிதர்கள் தலையீடே தேவையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

related_post