பான் கார்டு விண்ணப்ப விதிகளில் மாற்றம் – ஆதார் மட்டும் போதாது
பான் கார்டு விண்ணப்ப விதிகளில் மாற்றம் – ஆதார் மட்டும் போதாது.!
இந்தியாவில் பான் (PAN) கார்டு பெறும் விதிகளில் 2026 ஏப்ரல் 1 முதல் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, இனி ஆதார் கார்டை மட்டும் பயன்படுத்தி பான் கார்டு பெற முடியாது.
புதிய விதிகளின்படி, விண்ணப்பதாரர்கள் தங்களது பிறந்த தேதியை உறுதிப்படுத்த கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக பிறப்புச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது 10ஆம் வகுப்பு சான்றிதழ் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை வழங்க வேண்டும்.
மேலும், பான் கார்டில் உள்ள பெயர், ஆதார் கார்டில் உள்ள பெயருடன் முழுமையாகப் பொருந்த வேண்டும். பெயரில் வேறுபாடு இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
அதோடு, பழைய Form 49A நீக்கப்பட்டு, புதிய Form 93, 94, 95 ஆகிய விண்ணப்பப் படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்கள், நிதி பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், போலி பான் கார்டுகளைத் தடுக்கவும் கொண்டு வரப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.