dark_mode
Image
  • Tuesday, 09 September 2025

4 மாவட்டங்களில் இன்று கன மழை

4 மாவட்டங்களில் இன்று கன மழை

சென்னை: 'தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் சில இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அதிகபட்சமாக தலா, 10 செ.மீ., மழை பெய்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, விழுப்புரம் மாவட்டம் வல்லம், சென்னை மணலி புதுநகரில் தலா, 9; விழுப்புரம் மாவட்டம் ஆனந்தபுரம், பெரம்பலுார் மாவட்டம் செட்டிகுளம், திருச்சி மாவட்டம் வத்தலை அணைக்கட்டு பகுதிகளில் தலா, 7; சேலம் மாவட்டம் ஏற்காட்டில், 6 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

தமிழகம் உட்பட தென் மாவட்டங்களின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.