dark_mode
Image
  • Monday, 08 December 2025

10, 12ம் வகுப்பு மாணவர்களை இன்று கவுரவிக்கிறார் விஜய்; விருது வழங்கும் விழாவுக்கு தடபுடல் ஏற்பாடு

10, 12ம் வகுப்பு மாணவர்களை இன்று கவுரவிக்கிறார் விஜய்; விருது வழங்கும் விழாவுக்கு தடபுடல் ஏற்பாடு

சென்னை: த.வெ.க., தலைவர் விஜய் 10, 12ம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளை இன்று (மே 30) சந்தித்து கவுரவிக்க உள்ளார்.
 

தமிழகம், புதுச்சேரியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள், சமீபத்தில் வெளியாகின. இந்த தேர்வுகளில், சட்டசபை தொகுதி வாரியாக, அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் அழைத்து பாராட்ட உள்ளார்.4

இந்நிலையில் இன்று(மே 30) சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டலில் விஜய் கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர் என 2000க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

இதில், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள 88 சட்டசபை தொகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பாராட்டப்பட உள்ளனர். பெற்றோர் முன்னிலையில், மாணவர்களுக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை ஆகியவற்றை, த.வெ.க., தலைவர் விஜய் வழங்க உள்ளார்.

related_post