மூச்சுத்திணறல்!.. நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தோழர் நல்லகண்ணு உடல்நிலை பின்னடைவை சந்தித்திருப்பதாக தகவல்கள் வருகின்றது. சமீபகாலமாக நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை சீராக இல்லை. சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருகின்றது.
சிகிச்சையில் முன்னேற்றம் காணப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றே தகவல்கள் வருகின்றது. தொடர்ந்து நல்லகண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை அறிந்த தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று நல்லகண்ணு உடல்நிலை குறித்து விசாரித்தார்.
முதல்வரை தொடர்ந்து பலர் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து அறிந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியனும் மருத்துவமனைக்கு சென்று நல்லகண்ணு உடல்நிலை குறித்து விசாரித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வீரபாண்டியன், தோழர் நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றது. தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து விசாரித்து கேட்டறிந்தார்.
தற்போது இருக்கும் சூழ்நிலையின்படி அவரின் உடல்நிலை பின்னடைவை சந்தித்துக்கொண்டே வருகின்றது. மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனாலும் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. தொடர்ந்து தீவிரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. கட்சி தலைமைக்கும் நல்லகண்ணுவின் உறவினருக்கும் அவரின் உடல்நிலை குறித்து உடனுக்குடன் தெரிவித்து வருகின்றனர். தன் வாழ்நாள் முழுவதும் நாட்டிற்காக போராடியவர் தான் நல்லகண்ணு.
வாழ்நாள் முழுவதும் நாட்டிற்காக போராடிய அவர் தற்போது இயற்கையுடன் போராடிக்கொண்டு இருக்கின்றார் என பேசினார் வீரபாண்டியன். இதற்கிடையில் தோழர் நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை முன்னேற்றம் கண்டு அவர் குணமடைய வேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதைப்போல தான் ஒரு சில மாதங்களுக்கு முன்பும் தோழர் நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை பின்னடைவை சந்தித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவ்வப்போது இதுபோல அவரின் உடல்நிலை சமீபகாலமாக சரியில்லாமல் போய்க்கொண்டு வருகின்றது. ஆனாலும் வீரபாண்டியன் சொன்னதுபோல வாழ்நாள் முழுவதும் போராடிக்கொண்டு இருந்த நல்லகண்ணு அவர்கள் தற்போது இயற்கையுடனும் போராடிக்கொண்டு தான் வருகின்றார். இந்த போராட்டத்திலும் அவர் வெற்றிபெற்று உடல்நலம் தேறி மீண்டு வரவேண்டும் என்பதே அனைவரது வேண்டுதலாகவும் உள்ளது.
இந்நிலையில் நூறு வயதை கடந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவரான தோழர் நல்லகண்ணு அவர் வாழ்நாளில் கண்டிராத போராட்டங்களே இல்லை எனலாம். சமூக நீதி, விவசாயம் உட்பட பல போராட்டங்களை கையிலெடுத்து மக்களுக்கு நியாயம் கிடைக்க வழி வகுத்தவர் தான் நல்லகண்ணு. குறிப்பாக சுதந்திர போராட்டத்திலும் தனது பங்கை வழங்கியிருக்கிறார் நல்லகண்ணு.
இளம் வயது முதல் தற்போது வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வெற்றியடைந்து வரும் நல்லகண்ணு தற்போது இயற்கையுடன் நடந்து வரும் போராட்டத்திலும் வெற்றிபெற்று குணமடைய வேண்டும். அதற்காக தான் பொதுமக்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை அனைவரும் வேண்டிக்கொண்டு வருகின்றனர். தமிழக முதல்வரும் தொடர்ந்து மருத்துவர்களோடு பேசிக்கொண்டு அவரின் உடல்நிலை குறித்து அறிந்து விசாரித்து வருகின்றார்.