dark_mode
Image
  • Saturday, 24 May 2025

ஹிந்து தர்மத்தை டெங்கு, மலேரியா வைரசுடன் ஒப்பிடுவது துர்பாக்கியம்: கவர்னர் ரவி பேச்சு

ஹிந்து தர்மத்தை டெங்கு, மலேரியா வைரசுடன் ஒப்பிடுவது துர்பாக்கியம்: கவர்னர் ரவி பேச்சு

ஹிந்து தர்மத்தை டெங்கு, மலேரியா வைரசுடன் ஒப்பிடுவது துர்பாக்கியமாகும்,'' என, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் நடந்த சமுதாய நல்லிணக்க கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

அவர் மேலும் பேசியதாவது: ஆங்கிலேயர்கள் அமெரிக்கா, கனடா நாடுகளில் அடித்தட்டு மக்களிடையே பிரித்தாளும் முறையை செயல்படுத்தினர். இந்தியாவில் அந்த வழியை பின்பற்ற முடியவில்லை. இந்தியா பெரிய நாடாக இருந்தாலும் சமூகத்தினர் ஒற்றுமையாக இருந்தனர். சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி தேசிய ராணுவம் அமைத்த போது தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் பேர் இணைந்தனர்.

 

இச்சூழலில் ஆங்கிலேயர்கள் எப்படி பிரித்தாள்வது என யோசித்தனர். எது ஒன்றுபடுத்துவது என யோசித்ததில் கோயில்கள் என கண்டுபிடித்தனர். மக்களின் அனைத்து வாழ்வியலிலும் கோயில்கள் தான் மையமாக இருந்ததை தெரிந்து கொண்டனர். கோயில்களை பலவீனப்படுத்தினால் சமூகத்தை, சமுதாயத்தை பலவீனப்படுத்த முடியும் என முடிவு செய்தனர்.

 

கோயில்களை நிலங்கள் சொத்துக்கள் மூலம் வருவாய் ஏற்படுத்தி நிர்வகித்தனர். அதனால் கட்ட முடியாத வகையில் வரிகளை அதிகப்படுத்தி முடக்கினர். ஜாதிகளுக்குள்ளும் பிரிவினை ஏற்படுத்தினர். அதுவும் சமுதாயத்தில் பிரிவினையை ஏற்படுத்தியது.

 

comment / reply_from

related_post