டில்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம்!

டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று (மே 24) நிடி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.
மாநிலங்களுக்குரிய நிதிப் பங்கீட்டை நிர்ணயம் செய்யும் நிடி ஆயோக் அமைப்பின் ஆலோசனை கூட்டம் டில்லியில் இன்று (மே 24) நடை பெறுகிறது. இந்த கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார்.
இந்த நிடி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டத்தில், 2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின், திரிபுரா முதல்வர் மணிக் சாஹா, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க உள்ளார். கூட்டத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.
நிடி ஆயோக்கில் கலந்து கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்திற்கு நிதி ஒதுக்குமாறு வலியுறுத்த உள்ளார். இன்று பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார். அவருக்கு மாலை 4.10 மணியளவில் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description