ஓ.பன்னீர்செல்வம் 2 நாட்கள் பிளான்... 2026 தேர்தல் கூட்டணி முடிவு என்ன? எழுதி கொடுக்க உத்தரவு!

அதிமுக தொண்டர்கள் உரிமைகள் மீட்பு குழு என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வரும் குழுவின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இன்று மாலை அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது
ஓ.பன்னீர்செல்வம் எதிர்காலம் என்ன? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியிருக்கிறது. இவரை அதிமுகவிற்குள் சேர்த்து கொள்ள மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி கறார் காட்டி வருகிறார். மறுபுறம் பெரிதும் நம்பியிருக்கும் பாஜக தரப்பு நைசாக கைகழுவும் முடிவில் இருப்பதாக பேசப்படுகிறது. இப்படி எந்த பக்கமும் செல்ல முடியாமல் தவிக்கும் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை அழைத்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்
ஓ.பன்னீர்செல்வம் திட்டம்
முன்னதாக அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், சில எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் உடன் தனித்து இயங்கி வந்தார். பின்னர் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் குழு ஒன்றை உருவாக்கினார். இதனை தன்னுடைய அதிகாரப்பூர்வ அடையாளமாக வைத்து கொண்டு கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். 2024 மக்களவை தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.
மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி
அதில் 3.42 லட்சம் வாக்குகள் (30 சதவீதம்) பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இந்நிலையில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகிறார். இந்த முறை அதிரடியாக அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது. எனவே இந்த கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் செய்தியாளர்கள் கேட்கையில், அதிமுகவின் உள் விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று பதிலளித்தார்.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description