dark_mode
Image
  • Wednesday, 10 September 2025

வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெளிப்படையாக அறிவிக்காதது ஏன்: முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி

வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெளிப்படையாக அறிவிக்காதது ஏன்: முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி

சென்னை: தமிழகத்துக்கு வந்த வெளிநாட்டு முதலீடு குறித்து வெளிப்படையாக ஏன் அறிக்கை வெளியிடுவதில்லை என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஐந்து முறை வெளிநாட்டுப் பயணங்கள், முதலீட்டாளர் மாநாடு என்று கூறும் தமிழக முதல்வர் ஏன் தமிழகத்துக்கு வந்த வெளிநாட்டு முதலீடு பற்றி வெளிப்படையாக அறிவிப்பு வெளியிடுவதில்லை?

எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது?

எவ்வளவு முதலீடு பெற்றுள்ளோம்?

எவ்வளவு தொழில்கள் துவங்கப்பட்டுள்ளன?

எவ்வளவு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன?

என்பதை தைரியமாக தமிழக தொழில் துறை இணையதளத்திலோ, அல்லது தமிழக முதலீட்டு வழிகாட்டி நிறுவனத்தின் இணையதளத்திலோ வெளிப்படையாக ஏன் வெளியிடுவதில்லை? அதை விட்டுவிட்டு எக்ஸ் வலைதளத்தில் தொழில்துறை அமைச்சரும், முதல்வரும் தொடர்ந்து வெற்று விளம்பரம் தேடுவது, இந்த அரசு ஒரு பொய், பித்தலாட்ட அரசு என்பதையே உறுதி செய்கிறது.

உங்கள் ஆட்சியில் தொழில் முதலீடுகள் குறித்தும், துவங்கப்பட்ட தொழில்கள் குறித்தும், உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் குறித்தும், முதல்வர் ஸ்டாலினிடம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக வெள்ளை அறிக்கை கேட்கிறேன்.

இனியும் எக்ஸ் வலைதளத்தில் பொய் புரட்டு புள்ளிவிவரங்களை அள்ளிவிட்டு தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்ற வேண்டாம் என்றும், தொழில் முதலீடுகள் குறித்து 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் இபிஎஸ் கூறியுள்ளார்.

related_post