வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து நாடு திரும்புகிறார் நிர்மலா சீதாராமன்

புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடு திரும்ப உள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில், இயற்கையை ரசிக்க சுற்றுலா பயணியர் நேற்று திரண்டிருந்தனர். அப்போது ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள், அப்பாவி மக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த தாக்குதலில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட, 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தை அடுத்து, அரசு முறை பயணமாக சவுதி சென்றுள்ள பிரதமர் மோடி, தனது பயணத்தை ரத்து செய்து நாடு திரும்ப உள்ளார். இந்நிலையில், அமெரிக்கா மற்றும் பெரு நாட்டுக்கு சென்றுள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடு திரும்ப உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த கடினமான மற்றும் துயரமான நேரத்தில் நம் மக்களுடன் இருக்க, நிர்மலா இந்தியாவுக்குத் திரும்ப உள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description