dark_mode
Image
  • Thursday, 24 April 2025

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!
பெஹல்காம் தாக்குதல் குறித்து ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயங்கரவாதிகளை எந்த காரணத்தை முன்னிட்டும் தப்ப விடமாட்டோம் என்று உறுதிப்படக் கூடியுள்ளார்.
 
 
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 28 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட நிலையில் தாக்குதல் நடந்த இடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு நடத்தினார்.
 
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நிலையில் அதன் பின் அவர் தனது சமூக வலைதளத்தில் ’பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களின் வலியை ஒவ்வொரு இந்தியரும் உணர்கிறார்கள்.
அப்பாவி மக்களை கொன்ற பயங்கரவாதிகளை ஒருபோதும் தப்பிக்க விடமாட்டோம் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் நான் உறுதி அளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
 
 இதனை அடுத்து பயங்கரவாதிகளை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

comment / reply_from

related_post