dark_mode
Image
  • Saturday, 19 April 2025

வெற்றி துரைசாமி சாலை விபத்தில் உயிரிழப்பு - வானதி சீனிவாசன் இரங்கல்

வெற்றி துரைசாமி சாலை விபத்தில் உயிரிழப்பு - வானதி சீனிவாசன் இரங்கல்

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது மறைவிற்கு பாஜக எம்.எல்.ஏ.

வானதி சீனிவாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றார். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கோபிநாத் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்லஜ் நதியில் விழுந்த காரில் இருந்து காணாமல் போன சைதை துரைசாமியின் மகன் வெற்றியை தேடும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், சட்லெஜ் ஆற்றில் மாயமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரை சாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் ஆற்றில் அவரது உடல் கிடைத்துள்ளது.

 இந்த நிலையில், முன்னாள் சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான, திரு சைதை துரைசாமி அவர்களது மகன் திரு.வெற்றி துரைசாமி அவர்களது இறப்பு செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் சைதை துரைசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

வெற்றி துரைசாமி சாலை விபத்தில் உயிரிழப்பு - வானதி சீனிவாசன் இரங்கல்

comment / reply_from

related_post