
விரைவில் வரப்போகும் ஃபேஸ்புக் புதுப்பிப்பு :
சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக் தனி சாம்ராஜ்யம் நடத்துகிறது. பயனர்களைத் தக்கவைக்க புதிதாகப் பல்வேறு விஷயங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் ஃபேஸ்புக், அது சார்ந்த விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், சுயாதீன எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான புதிய செய்திமடல் (Newsletters) தளம் ஒன்றைத் தொடங்கவிருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.