விமானத்தில் நடுவானில் விமானி அறை கதவை திறக்க முயன்ற பயணி.. பெங்களூரில் பரபரப்பு..!

பெங்களூருவில் இருந்து வாரணாசிக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில், பயணி ஒருவர் நடுவானில் விமானியின் அறை கதவை திறக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.
விமானம் வாரணாசியில் தரையிறங்கியதும், அந்தப் பயணி மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணையில், அந்தப் பயணி வேண்டுமென்றே இச்செயலைச் செய்யவில்லை என தெரியவந்துள்ளது. இது அவரது முதல் விமானப் பயணம் என்பதால், தவறுதலாக நடந்த சம்பவம் எனக் கூறப்பட்டது. இதன் காரணமாக, அவர் மீது வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இந்த சம்பவம், விமானப் பயணத்தின்போது பயணிகள் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. விமான பயணத்தின்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிகள் குறித்து, பயணிகள் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.