விஜய்க்கு சம்மன் அனுப்புகிறதா சிபிஐ? ஜனவரியில் டெல்லிக்கு செல்ல வாய்ப்பு..!
கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கட்சியின் தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்ப சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தப்பட்டது.
கூட்டத்திற்கு பெறப்பட்ட அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விஜய் வருவதற்கு ஏற்பட்ட தாமதம் ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில், வரும் ஜனவரி மாதம் விஜய்யை நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்ப வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.