
வானிலை மையம் அறிவிப்பு:- தமிழகத்தில் நாளை முதல் மழை
பருவ நிலை, அதிகரித்து வரும் காற்று மாசு, புவி வெப்பமாதல் போன்ற காரணங்களால் மாற்றம் அடைந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும், மார்ச் 6, 7ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று முழுவதும் தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும், வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் கனமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.