dark_mode
Image
  • Sunday, 24 August 2025
வரையாடுகள் கணக்கெடுப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் பணி இன்று துவங்கியது

வரையாடுகள் கணக்கெடுப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் பணி இன்று துவங்கியது

திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. புலிகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், யானைகள் போன்ற உயிரினங்கள் இருப்பதால் வருடத்துக்கு ஒருமுறை பொது கணக்கெடுப்பு மற்றும் நான்கு ஆண்டுக்கு ஒருமுறை வரையாடுகள் கணக்கெடுப்பும் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது.

இந்த கணக்கெடுப்பு பணி ராஜபாளையத்தில் உள்ள தேவதானம், சேத்தூர் திருவில்லிபுத்தூர் பகுதியிலுள்ள செண்பகத்தோப்பு, மம்சாபுரம், குன்னூர் பீட், வ.புதுப்பட்டி, கான்சாபுரம், வத்திராயிருப்பு பிளவக்கல் அணை மற்றும் மதுரை மாவட்டம் சாப்டூர் ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது. கணக்கெடுப்பு பணியில் வேட்டை தடுப்பு காவலர்கள், வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

related_post