dark_mode
Image
  • Sunday, 13 September 2026

வருண் சக்கரவர்த்தி ஃபார்மில் சரிவு.? – KKR பயிற்சியாளர் நம்பிக்கை

வருண் சக்கரவர்த்தி ஃபார்மில் சரிவு.? – KKR பயிற்சியாளர் நம்பிக்கை

வருண் சக்கரவர்த்தி சமீபத்திய ஆட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படாததால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கவலை எழுந்துள்ளது.

கடந்த சில போட்டிகளில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து, விக்கெட்டுகள் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவரது ‘மிஸ்டரி ஸ்பின்’ இனி பயனளிக்காது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் 48 ரன்கள் வழங்கியதும் இந்த விமர்சனத்தை அதிகரித்துள்ளது. மேலும், சமீபத்திய டி20 போட்டிகளிலும் அவரது எகானமி ரேட் அதிகமாக இருந்தது கவனிக்கப்படுகிறது.

இதுகுறித்து அபிஷேக் நாயர் கூறுகையில், “எதிரணி அணிகள் தற்போது வருணை திட்டமிட்டு எதிர்கொள்கின்றன. ஆனால் அவர் மனதளவில் வலுவாக இருக்கிறார். விரைவில் மீண்டும் விக்கெட்டுகள் எடுத்து தனது திறமையை நிரூபிப்பார்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வரும் போட்டிகளில், குறிப்பாக வலுவான பேட்டிங் அணிகளுக்கு எதிராக வருண் எப்படி செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

related_post