dark_mode
Image
  • Sunday, 23 November 2025

வயநாட்டுக்கு வருகை தருகிறார் பிரதமர் மோடி.. நிலச்சரிவு பாதிப்புகள் ஆய்வு..!

வயநாட்டுக்கு வருகை தருகிறார் பிரதமர் மோடி.. நிலச்சரிவு பாதிப்புகள் ஆய்வு..!
கேரளாவில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி வரும் பத்தாம் தேதி வருகை தர இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
வயநாடு பகுதியில் உள்ள மூன்று மலை கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 300-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் ஒரு வாரத்திற்கு மேலாக அங்கு மீட்பு படையினர் மீட்பு பணிகளை செய்து வருகின்றனர் என்பது தெரிந்தது.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஏற்கனவே மத்திய அரசு ராணுவத்தை அனுப்பி உள்ளது என்பதும் விமானப்படையும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி வரும் பத்தாம் தேதி வயநாட்டிற்கு வருகை தர இருப்பதாகவும் அப்போது அவர் நிலச்சரிவு பாதிப்புகளை ஆய்வு செய்கிறார் என்றும் கூறப்படுகிறது.
வயநாட்டுக்கு வருகை தருகிறார் பிரதமர் மோடி.. நிலச்சரிவு பாதிப்புகள் ஆய்வு..!

related_post