வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு வழக்கு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு.!!

10.5% வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தேதிகுறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான சட்ட மசோதாவை நிறைவேற்றி அரசாணை பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை , 10.5% உள்ஒதுக்கீடு அரசியல் அமைப்பிற்கு எதிரானது எனக்கூறி தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது.
உயர்நீதிமன்றத்தின் உள் ஒதுக்கீடு ரத்து தொடர்பன தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பா.ம.க. சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை திட்டமிட்டபடியே பிப்ரவரி 15, 16ம் தேதிகளில் நடைபெற்றது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description