dark_mode
Image
  • Friday, 07 March 2025

லாட்ஜில் இளம் பெண்.. மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து அத்துமீறிய கும்பல்

லாட்ஜில் இளம் பெண்.. மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து அத்துமீறிய கும்பல்

 

வேலூர்: சின்ன காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் தனது நிலத்தை விற்று திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சீட்டு நிறுவனம் நடத்தி வரும் அல்தாப் தாசின் என்பவரிடம் ரூ.15 லட்சத்துக்கு சீட்டு கட்டி வந்தாராம். ஆனால் அவரது நிறுவனத்தினர் அந்த பெண் சேர்த்துவிட்டவர்களுக்கு முழு பணத்தை கொடுக்கவில்லையாம். இதை கேட்க போன அந்த பெண்ணை மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து கும்பலாக அத்துமீறியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், தனது நிலத்தை விற்று திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சீட்டு நிறுவனம் நடத்தி வரும் அல்தாப் தாசின் என்பவரிடம் ரூ.15 லட்சத்துக்கு சீட்டு கட்டி வந்ததாக கூறப்படுகிறது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அந்த பெண், தான் சீட்டு கட்டியதோடு மட்டுமல்லாமல். அந்த நிறுவனத்தில் தனக்கு தெரிந்தவர்களையும் சேர்த்து விட்டுள்ளார். இந்த வகையில் சுமார் ரூ.1 கோடியே 75 லட்சத்துக்கு சீட்டு கட்டி உள்ளாராம். தொடர்ந்து அந்த நிறுவனத்தினர் இளம்பெண் சேர்த்து விட்ட நபர்களுக்கு ரூ.40 லட்சத்தை கொடுத்துள்ளனர். மீதி பணத்தை அந்த பெண் கேட்டுள்ளார். ஆனால் மீதி பணத்தை கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

 

இளம்பெண் இது சம்பந்தமாக பணத்தை அல்தாப் தாசினிடம் அடிக்கடி கேட்டு வந்தாராம்.அதனால் அவர் வேலூர் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறினாராம்.. அதன்படி அந்த பெண் தனது தாயாருடன் கடந்த நவம்பர் மாதம் 3-ந் தேதி வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே வந்திருக்கிறார். பின்னர் அவர் அருகே உள்ள தங்கும் விடுதிக்கு வருமாறு கூறினார்களாம். அந்த பெண் ஏன் விடுதிக்கு வரவேண்டும் என்று கேட்ட போது, பொது இடத்தில் அதிக தொகை கொடுத்தால் பிரச்சினை வரும் என்றும் அதனால் விடுதிக்கு வருமாறும் கூறினாராம்.

 

இதை நம்பிய தாயும், மகளும் விடுதிக்கு சென்றுள்ளாரகள்.. அங்கிருந்த கிரிஜா, புவனா, தேவி மற்றும் ராஜ்குமார், மகேஷ் ஆகியோர் கொண்ட கும்பல் சேர்ந்து பணத்தை கொடுக்க முடியாது என்றும், பணம் கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

மேலும் இளம் பெண்ணின் தாயை ஒருவர் வேறு ஒரு இடத்துக்கு அழைத்து சென்றார்களாம். இந்த நேரத்தில் இளம் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அல்தாப் தாசின், மகேஷ், ராஜ்குமார் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்களாம். பின்னர் அவர்கள் அந்த பெண்ணிடம், உன்னை பாலியல் பலாத்காரம் செய்தும், ஆடைகளை கழற்றி நிர்வாணமாகவும் வீடியோ எடுத்து வைத்திருக்கிறோம். இதை வெளியில் சொன்னால் இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டினார்களாம்.

 

இந்த தகவல்களை புகார் எழுதி, காஞ்சிபுரம் பெண் கடந்த மாதம் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணனிடம் புகார் மனு கொடுத்தார். அவரது உத்தரவின்பேரில் அல்தாப் தாசின், மகேஷ், ராஜ்குமார் மற்றும் கிரிஜா, தேவி, புவனா ஆகிய 6 பேர் மீது வேலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வேலூரில் இளம் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

comment / reply_from

related_post