dark_mode
Image
  • Friday, 29 November 2024

ரேபரேலியில் மட்டுமல்ல அமேதியிலும் வெற்றி பெறுவோம் - பிரியங்கா காந்தி

ரேபரேலியில் மட்டுமல்ல அமேதியிலும் வெற்றி பெறுவோம் - பிரியங்கா காந்தி
க்களவைத் தேர்தலின் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள 5-ஆம் கட்ட வாக்குப்பதிவுக்காக தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி டெபாசிட் வாங்குவதே கடினம் என கூறினார். உத்தரப்பிரதேசத்தில் ஒன்றாக வாக்குசேகரிக்கும் ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும், தென் இந்தியவுக்குச் சென்றால், வட இந்தியர்களை தரக்குறைவாக பேசுவதாக சாடினார்.

தேர்தலுக்குப் பிறகு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் பதவி பறிக்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்த நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வேன் என பிரதமர் குறிப்பிட்டார்.


தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் ராகுல் காந்தி சுற்றுலா சென்றுவிடுவார் எனவும், இந்தியா கூட்டணி உடைந்து சிதறும் எனவும் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் கட்சி அளித்ததாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியில் ராகுல் காந்திக்கு ஆதரவாக ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி வாகன பேரணி நடத்தினார். அப்போது பேசிய அவர், மத அரசியலில் ஈடுபடமாட்டேன் என கூறிய பிரதமர் மோடி, அடுத்த நாளிலேயே இஸ்லாமியர்களைப் பற்றி பேசியதாக விமர்சித்துள்ளார்.

இந்து - முஸ்லீம் அரசியல் தான் பாஜகவின் அடித்தளமாக இருக்கும் நிலையில், மத அரசியல் பேசுவதில்லை என பிரதமர் மோடி கூறுவதை எப்படி நம்புவது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மத அரசியலை விட்டுவிட்டு, பணவீக்கம், வேலையின்மை குறித்தும், விவசாயிகள், தொழிலாளர்கள் பிரச்னைகள் குறித்தும் பிரதமர், பேச வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தினார்.

: தென்னிந்தியாவின் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுக்கும் - அமித்ஷா திட்டவட்டம்

மேலும், 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று கூறுவதை பிரதமர் மோடி நிறுத்திவிட்டது ஏன் எனவும் பிரியங்கா காந்தி வினவினார். ரேபரேலியில் ராகுல் காந்தி தோற்பார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய நிலையில், ரேபரேலியில் மட்டுமல்ல அமேதியிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என பிரியங்கா காந்தி குறிப்பிட்டார்.
ரேபரேலியில் மட்டுமல்ல அமேதியிலும் வெற்றி பெறுவோம் - பிரியங்கா காந்தி

comment / reply_from

related_post

newsletter

newsletter_description