dark_mode
Image
  • Friday, 31 July 2026

ராசிபலன் 31-07-2026 வெள்ளிக்கிழமை

ராசிபலன் 31-07-2026 வெள்ளிக்கிழமை

ராசிபலன் 31-07-2026 வெள்ளிக்கிழமை

மேஷம்

ஜூலை 31, 2026

எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வருமான வாய்ப்பை மேம்படுத்துவீர்கள். இழுபறியான சில விஷயங்களை முடிப்பீர்கள். கடன் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் சாதகமாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அஸ்வினி : உதவிகள் கிடைக்கும்.
பரணி : அறிமுகம் ஏற்படும்.
கிருத்திகை : பயணங்கள் சாதகமாகும்.

---------------------------------------


ரிஷபம்
ஜூலை 31, 2026

வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் சந்திப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும். குழந்தைகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவார்கள். மூலிகை வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். கடன் பிரச்சனைகள் குறையும். பயண விஷயங்களில் நிதானம் வேண்டும். விவசாய பணிகளில் இருப்பவர்களுக்கு பாசன தொடர்பான வசதிகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

கிருத்திகை : லாபம் உண்டாகும்.
ரோகிணி : முன்னேற்றமான நாள்.
மிருகசீரிஷம் : வசதிகள் மேம்படும்.

---------------------------------------


மிதுனம்
ஜூலை 31, 2026

கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரிய தொடர்பான சுப விரயங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆசைகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியம் சாதகமாகும். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களை அறிந்து செயல்படுவீர்கள். பிரபலமான நபர்களின் அறிமுகங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.
திருவாதிரை : ஆசைகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : அறிமுகங்கள் கிடைக்கும்.

---------------------------------------


கடகம்
ஜூலை 31, 2026

எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் இருக்கும். கவனக்குறைவால் சில விரயம் உண்டாகும். சந்தர்ப்ப சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். மற்றவர்களால் சில நெருக்கடியான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : விரயம் உண்டாகும்.
பூசம் : அனுசரித்து செல்லவும்.
ஆயில்யம் : பொறுப்புகள் மேம்படும்.

---------------------------------------


சிம்மம்
ஜூலை 31, 2026

காணாமல் போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பிறமொழி மக்களின் அறிமுகம் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை உணருவீர்கள். போட்டி செயல்களில் சிந்தித்து செயல்படவும். நெருக்கமானவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

மகம் : அறிமுகம் கிடைக்கும்.
பூரம் : சிந்தித்து செயல்படவும்.
உத்திரம் : குழப்பங்கள் மறையும்.

---------------------------------------


கன்னி
ஜூலை 31, 2026

உத்தியோக ரீதியான பயணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் அனுசரித்து செல்லவும். போட்டிகளில் ஈடுபாடு உண்டாகும். சஞ்சலமான விஷயங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : பயணங்கள் உண்டாகும்.
அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.
சித்திரை : தன்னம்பிக்கை மேம்படும்.

---------------------------------------


துலாம்
ஜூலை 31, 2026

மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாசனை திரவியங்கள் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். எழுத்து தொடர்பான துறைகளில் கற்பனை வளம் அதிகரிக்கும். இணைய பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : புரிதல் உண்டாகும்.
சுவாதி : லாபங்கள் அதிகரிக்கும்.
விசாகம் : மேன்மையான நாள்.

---------------------------------------


விருச்சிகம்
ஜூலை 31, 2026

உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்ளவும். தனம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார நிமித்தமான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : ஏற்ற இறக்கமான நாள்.
அனுஷம் : செலவுகளில் கவனம்.
கேட்டை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------


தனுசு
ஜூலை 31, 2026

சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். காப்பீடு துறைகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். எழுத்து துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இழுபறியான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : தீர்வுகள் கிடைக்கும்.
பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் : மாற்றமான நாள்.

---------------------------------------


மகரம்
ஜூலை 31, 2026

செயல்பாடுகளில் இருந்த தடைகளை அறிவீர்கள். நீண்ட நாள் சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர்கள். அந்நியத்தில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல்கள் உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : தடைகளை அறிவீர்கள்.
திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.
அவிட்டம் : மாற்றமான நாள்.

---------------------------------------


கும்பம்
ஜூலை 31, 2026

மனதளவில் புதிய இலக்குகள் உருவாகும். கனவு தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். சமூகப் பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். விடாமுயற்சியுடன் செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தேர்வு பணிகளில் கவனத்துடன் இருக்கவும். நிர்வாக துறையில் திறமைகள் வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அவிட்டம் : இலக்குகள் உருவாகும்.
சதயம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------


மீனம்
ஜூலை 31, 2026

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். சமூக பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். வியாபார முதலீடுகளில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் சுதந்திர தன்மை மேம்படும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அலைச்சலும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்

பூரட்டாதி : அறிவு வெளிப்படும்.
உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.
ரேவதி : அலைச்சல் அதிகரிக்கும்.

---------------------------------------