dark_mode
Image
  • Saturday, 19 September 2026

ராசிபலன் 19-09-2026 சனிக்கிழமை

ராசிபலன் 19-09-2026 சனிக்கிழமை

 

ராசிபலன் 19-09-2026 சனிக்கிழமை

மேஷம்
செப்டம்பர் 19, 2026

சகோதரர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். அரசு துறைகளில் நிதானம் வேண்டும். சிறுதூரப் பயணம் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத சில சாதகமான அதிர்ஷ்டமான புதிய சூழ்நிலைகள் அமையும். இடமாற்றம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.
பரணி : நிதானம் வேண்டும்.
கிருத்திகை : ஆலோசனைகள் கிடைக்கும்.

---------------------------------------


ரிஷபம்
செப்டம்பர் 19, 2026

வேகத்தை விட விவேகத்தை கையாளுவது நல்லது. வரவைவிட செலவுகள் மேம்படும். நினைத்து ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் அமையும். உத்தியோகத்தில் சிறுசிறு இடர்பாடுகள் ஏற்பட்டு நீங்கும். உழைப்பிற்குண்டான பலன் காலதாமதமாகும். வியாபாரத்தில் சகிப்புத்தன்மையுடன் செயல்படவும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : செலவுகள் மேம்படும்.
ரோகிணி : இடர்பாடுகள் நீங்கும்.
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

---------------------------------------


மிதுனம்
செப்டம்பர் 19, 2026

கணவன் மனைவிக்கு இடையே புரிதல்கள் உண்டாகும். வெளிப்படையான குணத்தின் மூலம் அறிமுகங்கள் உருவாகும். சகோதர வகையில் ஆதரவுகள் கிடைக்கும். வர்த்தகத் தொழிலில் மேன்மை ஏற்படும். மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும். எதிர்பாராத சில நிகழ்வுகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : புரிதல்கள் உண்டாகும்.
திருவாதிரை : ஆதரவுகள் கிடைக்கும்.
புனர்பூசம் : ஒத்துழைப்புகள் ஏற்படும்.

---------------------------------------


கடகம்
செப்டம்பர் 19, 2026

எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். அரசு பணிகளில் அனுகூலம் உண்டாகும். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். வியாபார பணியில் சில மாற்றங்கள் மூலம் மேன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : மேன்மை உண்டாகும்.
ஆயில்யம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.

---------------------------------------


சிம்மம்
செப்டம்பர் 19, 2026

புத்திரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி முன்னேறுவதற்கான சிந்தனைகள் பிறக்கும். சக ஊழியர்களைப் பற்றிய புரிதல்கள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : செலவுகளில் கவனம்.
பூரம் : சிந்தனைகள் பிறக்கும்.
உத்திரம் : கவலைகள் குறையும்.

---------------------------------------


கன்னி
செப்டம்பர் 19, 2026

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். பயணத்தின் மூலம் சில மாற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : பேச்சுகளில் கவனம்.
அஸ்தம் : சிந்தனைகள் மேம்படும்.
சித்திரை : மாற்றமான நாள்.

---------------------------------------


துலாம்
செப்டம்பர் 19, 2026

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். அடிப்படை கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உருவாகும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். எதிலும் கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகள் சாதகமாக முடியும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.
சுவாதி : அனுபவம் உண்டாகும்.
விசாகம் : சாதகமான நாள்.

---------------------------------------


விருச்சிகம்
செப்டம்பர் 19, 2026

கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். தள்ளிப்போன சில விஷயங்கள் சாதமாக முடியும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் உண்டாகும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

விசாகம் : புரிதல் ஏற்படும்.
அனுஷம் : வரவுகள் கிடைக்கும்.
கேட்டை : மதிப்புகள் கிடைக்கும்.

---------------------------------------


தனுசு
செப்டம்பர் 19, 2026

தோற்றப்பொலிவில் மாற்றங்கள் உண்டாகும். தற்பெருமை பேசுவதை குறைத்துக் கொள்வது நல்லது. கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடங்களில் கவனம் வேண்டும். கால்நடை தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதிற்குப் பிடித்த செயல்களை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் தொடர்பான விஷயங்களை சிந்தித்து செயல்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : மாற்றங்கள் உண்டாகும்.
பூராடம் : கவனம் வேண்டும்.
உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------


மகரம்
செப்டம்பர் 19, 2026

திருப்பணி தொடர்பான செயல்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்து வந்த இழுபறி குறையும். புதுவிதமான இடங்களுக்குப் பயணம் செய்வது தொடர்பான சிந்தனைகள் உருவாகும். ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : வாய்ப்புகள் அமையும்.
திருவோணம் : சிந்தனைகள் மேம்படும்.
அவிட்டம் : மாற்றங்கள் ஏற்படும்.

---------------------------------------


கும்பம்
செப்டம்பர் 19, 2026

புதிய விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். புதுவிதமான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சினைகள் குறையும். உத்தியோக பணிகளில் இருந்து வந்த பொறுப்புகள் நீங்கி மேன்மை உண்டாகும். சமூகப் பணிகளில் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்

அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
சதயம் : பிரச்சினைகள் குறையும்.
பூரட்டாதி : கீர்த்தி உண்டாகும்.

---------------------------------------


மீனம்
செப்டம்பர் 19, 2026

உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் பணிகளில் மேன்மை ஏற்படும். உறவினர்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் ஆதாயமான சூழ்நிலை காணப்படும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : ஆதரவுகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : முன்னேற்றமான நாள்.
ரேவதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------