dark_mode
Image
  • Tuesday, 28 April 2026

ராசிபலன் 28-04-2026 செவ்வாய்க்கிழமை

ராசிபலன் 28-04-2026 செவ்வாய்க்கிழமை

ராசிபலன் 28-04-2026 செவ்வாய்க்கிழமை

மேஷம்
ஏப்ரல் 28, 2026

உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். மனதில் புதுவிதமான சிந்தனைகளும் தன்னம்பிக்கையும் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : தன்னம்பிக்கை மேம்படும்.

---------------------------------------


ரிஷபம்
ஏப்ரல் 28, 2026

நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். கணிதம் சார்ந்த துறைகளில் வாய்ப்புகள் மேம்படும். விவசாயப் பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : ஆதாயம் உண்டாகும்.
ரோகிணி : வசதிகள் மேம்படும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் மேம்படும்.

---------------------------------------


மிதுனம்
ஏப்ரல் 28, 2026

அரசு சார்ந்த செயல்பாடுகளில் தாமதமான சூழல் ஏற்படும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பே நிறைவேறும். எந்த ஒரு செயலிலும் உணர்ச்சி வேகம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். வியாபார பணிகளில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வட மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : தாமதம் உண்டாகும்.
திருவாதிரை : பொறுமை வேண்டும்.
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.

---------------------------------------


கடகம்
ஏப்ரல் 28, 2026

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சூழ்நிலை அறிந்து பேசுவது நன்மை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். செய்கின்ற செயல்களில் கவனம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

புனர்பூசம் : ஆதரவுகள் கிடைக்கும்.
பூசம் : மாற்றம் பிறக்கும்.
ஆயில்யம் : கவனம் வேண்டும்.

---------------------------------------


சிம்மம்
ஏப்ரல் 28, 2026

குணநலன்களில் சில மாற்றம் காணப்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் தூக்கமின்மையும் சேர்வும் ஏற்படும். அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்கள் பேச்சுக்களில் கவனம் வேண்டும். புதிய தொழில் நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் மேம்படும். சகோதர உறவுகளிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மகம் : சேர்வும் ஏற்படும்.
பூரம் : கவனம் வேண்டும்.
உத்திரம் : தெளிவுகள் பிறக்கும்.

---------------------------------------


கன்னி
ஏப்ரல் 28, 2026

உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கடன் செயல்களில் சிந்தித்து செயல்படவும். அரசு காரியத்தில் அலைச்சல் மேம்படும். பணிமாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மாறுபட்ட சிந்தனைகள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

உத்திரம் : பொறுமையுடன் செயல்படவும்.
அஸ்தம் : சிந்தித்து செயல்படவும்
சித்திரை : பொறுமை வேண்டும்.

---------------------------------------


துலாம்
ஏப்ரல் 28, 2026

நீண்ட நாள் வைப்பு திட்டங்கள் பற்றிய எண்ணங்கள் உருவாகும். எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். பெருந்தன்மையுடன் செயல்பட்டு பலரின் நம்பிக்கையை பெறுவீர்கள். உறவினர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

சித்திரை : சுறுசுறுப்பான நாள்.
சுவாதி : நம்பிக்கை மேம்படும்.
விசாகம் : குழப்பங்கள் குறையும்.

---------------------------------------


விருச்சிகம்
ஏப்ரல் 28, 2026

பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றியும் உலக வாழ்க்கை பற்றிய புரிதலும் மேம்படும். உபரி வருமான முயற்சிகள் மேம்படும். எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் நிமித்தமான ரகசியங்களை பகிராமல் இருப்பது நல்லது. பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : வரவுகள் உண்டாகும்.
அனுஷம் : முயற்சிகள் மேம்படும்.
கேட்டை : முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------


தனுசு
ஏப்ரல் 28, 2026

மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்படும். எதிர்பார்த்த தனம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். உத்தியோகப் பணிகளில் திட்டமிட்டு செயல்படவும். உணவு செயல்களில் கவனம் வேண்டும். வெளிப்படையான பேச்சுக்களால் நெருக்கடிகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

மூலம் : குழப்பங்கள் ஏற்படும்.
பூராடம் : திட்டமிட்டு செயல்படவும்.
உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------


மகரம்
ஏப்ரல் 28, 2026

கணவன் மனைவிக்கிடையே ஆரோக்கியமற்ற விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியம் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வீடு வாகன தொடர்பான விரயங்கள் ஏற்படும். வியாபாரம் செயல்களில் சிந்தித்து செயல்படவும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவுபெறும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : வாதங்கள் நீங்கும்.
திருவோணம் : விரயங்கள் ஏற்படும்.
அவிட்டம் : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------


கும்பம்
ஏப்ரல் 28, 2026

எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணியில் அமைதியான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
சதயம் : ஆதாயம் உண்டாகும்.
பூரட்டாதி : அமைதியான நாள்.

---------------------------------------


மீனம்
ஏப்ரல் 28, 2026

நிலுவையில் இருந்து வந்த பழைய கடன்கள் வசூலாகும். குழந்தைகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பொழுது போக்கு சார்ந்த செயல்களில் ஆர்வத்துடன் கலந்துகொள்வீர்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் சாதகமான வாய்ப்புகள் அமையும். பழைய மகிழ்ச்சியான நினைவுகள் வெளிப்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றமான தருணங்கள் உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
உத்திரட்டாதி : அனுகூலமான நாள்
ரேவதி : மாற்றமான நாள்.

---------------------------------------