dark_mode
Image
  • Wednesday, 09 September 2026

ராசிபலன் 09-09-2026 புதன்கிழமை

ராசிபலன் 09-09-2026 புதன்கிழமை

 

ராசிபலன் 09-09-2026 புதன்கிழமை 

மேஷம்
செப்டம்பர் 09, 2026

குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல்கள் அதிகரிக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்கள் உண்டாகும். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல்கள் உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.
பரணி : புரிதல்கள் அதிகரிக்கும்.
கிருத்திகை : தேடல்கள் பிறக்கும்.

---------------------------------------


ரிஷபம்
செப்டம்பர் 09, 2026

புதிய வியாபாரம் தொடர்பான எண்ணம் நிறைவேறும். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். மக்கள் தொடர்புத் துறைகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். எழுத்துக்களில் கற்பனை நயம் அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

கிருத்திகை : நெருக்கடிகள் குறையும்.
ரோகிணி : மகிழ்ச்சியான நாள்.
மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------


மிதுனம்
செப்டம்பர் 09, 2026

பிற மொழி பேசும் மக்களின் அறிமுகமும் ஆதரவும் ஏற்படும். வாக்கு திறமை மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். நண்பர்கள் மூலம் தொழில் சார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதுமையான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முதலீடு தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.
திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------


கடகம்
செப்டம்பர் 09, 2026

சகோதரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். புதிய கூட்டாளிகளை இணைப்பது பற்றிய சிந்தனைகள் ஏற்படும். விவேகத்துடன் செயல்பட்டால் மதிப்பும் பாராட்டுகளும் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பழக்க வழக்கங்களில் சில மாற்றம் உண்டாகும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் அறிமுகம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

புனர்பூசம் : ஆதரவுகள் கிடைக்கும்.
பூசம் : மதிப்புகள் கிடைக்கும்.
ஆயில்யம் : அறிமுகம் ஏற்படும்.

---------------------------------------


சிம்மம்
செப்டம்பர் 09, 2026

மாமன் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். உணவு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் தடைகள் விலகும். பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத மாற்றங்கள் நேரிடும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். ரகசியமான சில ஆய்வுகள் தெளிவுகளை உருவாக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மகம் : ஆதாயம் உண்டாகும்.
பூரம் : முன்னேற்றமான நாள்.
உத்திரம் : தெளிவுகள் பிறக்கும்.

---------------------------------------


கன்னி
செப்டம்பர் 09, 2026

குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்களும் மேம்படும். தனவரவுகளில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு சிந்தனைத் திறன் மேம்படும். மனதை உருத்திய கவலைகள் குறையும். உத்தியோகப் பணியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : இழுபறிகள் குறையும்.
சித்திரை : கவலைகள் குறையும்.

---------------------------------------


துலாம்
செப்டம்பர் 09, 2026

சகோதரரால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களின் சந்திப்புகள் ஏற்படும். பாதியில் நின்ற பணியை செய்து முடிப்பீர்கள். திடீர் வரவுகள் மூலம் கையிருப்புகள் மேம்படும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். பணவரவு திருப்தியை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : பிரச்சனைகள் குறையும்.
சுவாதி : கையிருப்புகள் மேம்படும்.
விசாகம் : திருப்தியான நாள்.

---------------------------------------


விருச்சிகம்
செப்டம்பர் 09, 2026

தொழில் நிமித்தமான பயணங்கள் சாதகமாக அமையும். தெய்வ சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகைக்கான வாய்ப்புகள் உருவாகும். தந்தை வழி உறவுகளின் ஆதரவுகள் கிடைக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். சாமர்த்தியமாக செயல்பட்டு எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

விசாகம் : சாதகமான நாள்.
அனுஷம் : வாய்ப்புகள் உருவாகும்.
கேட்டை : வெற்றிகரமான நாள்.

---------------------------------------


தனுசு
செப்டம்பர் 09, 2026

எதிலும் ஆர்வம் இன்றி செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பயனற்ற விவாதங்களை குறைப்பது நல்லது. புதிய நபர்களிடம் குடும்ப விவகாரங்கள் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மூலம் : விட்டுக் கொடுத்து செல்லவும்.
பூராடம் : வாதங்களை குறைக்கவும்.
உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------


மகரம்
செப்டம்பர் 09, 2026

மனதில் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வர்த்தக செயல்பாடுகளில் லாபங்கள் மேம்படும். வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

உத்திராடம் : அனுகூலமான நாள்.
திருவோணம் : லாபங்கள் மேம்படும்.
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------


கும்பம்
செப்டம்பர் 09, 2026

எதிர்பாராத வரவுகள் உண்டாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய வேலை நிமித்தமான எண்ணங்கள் கைகூடும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் உருவாகும். உடன் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். நிலுவையில் இருந்த பொருட்கள் விற்பனையாகும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

அவிட்டம் : வரவுகள் உண்டாகும்.
சதயம் : சந்திப்புகள் உருவாகும்.
பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.

---------------------------------------


மீனம்
செப்டம்பர் 09, 2026

புதிய முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். கற்பனை சார்ந்த துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். நம்பிக்கையானவர்களைப் பற்றிய புரிதல்கள் மேம்படும். உத்தியோகத்தில் பொறுப்பும் அலைச்சலும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

பூரட்டாதி : சாதகமான நாள்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரேவதி : புரிதல்கள் மேம்படும்.

---------------------------------------