ராசிபலன் 17-04-2026 வெள்ளிக்கிழமை
ராசிபலன் 17-04-2026 வெள்ளிக்கிழமை
மேஷம்
ஏப்ரல் 17, 2026
உடன்பிறந்தவர்கள் மூலம் சில செலவுகள் வரும். வதந்திகளை நம்பி முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். வழக்கமான சில பணிகளில் திடீர் மாற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் உண்டாகும். உத்தியோகத்தில் மாறுபட்ட வாய்ப்புகள் உருவாகும். வாகன பயணத்தில் விவேகம் வேண்டும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
அஸ்வினி : செலவுகள் உண்டாகும்.
பரணி : மாற்றம் ஏற்படும்.
கிருத்திகை : விவேகம் வேண்டும்.
---------------------------------------
ரிஷபம்
ஏப்ரல் 17, 2026
உடன் பிறந்தவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வெளி வட்டாரங்களில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். இழுபறியாக இருந்து வந்த தனவரவுகள் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் நிறம்
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : ஒத்துழைப்புகள் மேம்படும்.
மிருகசீரிஷம் : இழுபறிகள் குறையும்.
---------------------------------------
மிதுனம்
ஏப்ரல் 17, 2026
தாராளமான தனவரவுகள் உண்டாகும். பணியாளர்களுக்கு செல்வ சேர்க்கைக்கான வாய்ப்புகள் உருவாகும். கல்வியில் இருந்து வந்த ஆர்வ இன்மை குறையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வியாபார பணிகளில் பொருளாதாரம் உயர்வு உண்டாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மிருகசீரிஷம் : வரவுகள் உண்டாகும்.
திருவாதிரை : ஆர்வ இன்மை குறையும்.
புனர்பூசம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
கடகம்
ஏப்ரல் 17, 2026
எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பொதுமக்கள் துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். நீண்ட கால முதலீடுகள் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். விவசாய பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்
புனர்பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.
பூசம் : உதவிகள் கிடைக்கும்.
ஆயில்யம் : தீர்வு கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்
ஏப்ரல் 17, 2026
உயர் பொறுப்பில் இருப்போர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆராய்ச்சி துறைகளில் முன்னேற்றம் காணப்படும். இழுபறியான சில வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். தர்ம காரியத்தில் ஈடுபாடுகள் உண்டாகும். கமிஷன் பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உறுதி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
மகம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.
பூரம் : கையிருப்புகள் அதிகரிக்கும்.
உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------
கன்னி
ஏப்ரல் 17, 2026
தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். தோற்றப்பொழிவில் சில மாற்றம் உண்டாகும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரம் ரீதியான முயற்சிகளில் விவேகம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
அஸ்தம் : தாமதம் ஏற்படும்.
சித்திரை : விவேகம் வேண்டும்.
---------------------------------------
துலாம்
ஏப்ரல் 17, 2026
கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். துணைவர் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். சுபகாரிய பயணம் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகங்கள் உருவாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். தடைகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : அனுகூலமான நாள்.
சுவாதி : பிரச்சனைகள் குறையும்.
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
விருச்சிகம்
ஏப்ரல் 17, 2026
வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குழப்பம் நீங்கி தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் ஏற்பட்ட சில பிரச்சனைகள் தீரும். உத்தியோக பணிகளில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : குழப்பம் நீங்கும்.
அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
கேட்டை : பொறுப்புகள் குறையும்.
---------------------------------------
தனுசு
ஏப்ரல் 17, 2026
குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுது போக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். செயல்பாடுகளில் ஒரு விதமான மந்ததன்மை உண்டாகும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர் பாலின மக்கள் விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். புதுவிதமான செயல் திட்டங்கள் உருவாகும். பயம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மூலம் : ஆர்வம் உண்டாகும்.
பூராடம் : அனுசரித்து செல்லவும்.
உத்திராடம் : புதுமையான நாள்.
---------------------------------------
மகரம்
ஏப்ரல் 17, 2026
தொழில் நிமித்தமான பயணங்கள் ஏற்படும். கால்நடை தொடர்பான செயல்பாடுகள் மூலம் ஆதாயம் உண்டாகும். சில அனுபவங்கள் மூலம் புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீல நிறம்
உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.
திருவோணம் : புரிதல் அதிகரிக்கும்.
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------
கும்பம்
ஏப்ரல் 17, 2026
மனதளவில் இருந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். மறைமுகமான சில விஷயங்களை அறிவீர்கள். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பாகப்பிரிவினை செயல்களில் விவேகம் வேண்டும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென் மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : சோர்வு நீங்கும்.
சதயம் : விவேகம் வேண்டும்.
பூரட்டாதி : மேன்மையான நாள்.
---------------------------------------
மீனம்
ஏப்ரல் 17, 2026
நெருக்கமான உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பெருத்தன்மையான செயல்பாடுகள் மூலம் நம்பிக்கை மேம்படும். விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். நண்பர்கள் வழியில் வருமான வாய்ப்புகள் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : ஆரோக்கியத்தில் கவனம்.
ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------