dark_mode
Image
  • Thursday, 14 August 2025

ராசிபலன் 14-12-2023 வியாழக்கிழமை

ராசிபலன் 14-12-2023 வியாழக்கிழமை

ராசிபலன் 14-12-2023 வியாழக்கிழமை

மேஷம்

டிசம்பர் 14, 2023



குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தனவரவுகளின் மூலம் திருப்தியான மனநிலை உண்டாகும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். மனதிற்குப் புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


அஸ்வினி :  கலகலப்பான நாள்.

பரணி : சிந்தனைகள் மேம்படும்.

கிருத்திகை : தன்னம்பிக்கை பிறக்கும்.
---------------------------------------


ரிஷபம்

டிசம்பர் 14, 2023



செயல்பாடுகளில் குழப்பம் உண்டாகும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். திடீர் பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. சக ஊழியர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். மேன்மை நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்


கிருத்திகை : குழப்பம் உண்டாகும்.

ரோகிணி : பதற்றமின்றி செயல்படவும்.

மிருகசீரிஷம் : புரிதல் மேம்படும்.
---------------------------------------


மிதுனம்

டிசம்பர் 14, 2023



பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் கிடைக்கும். புதிய கலைகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


மிருகசீரிஷம் :  மகிழ்ச்சியான நாள்.

திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

புனர்பூசம் :  சாதகமான நாள்.
---------------------------------------


கடகம்

டிசம்பர் 14, 2023



புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். கால்நடைகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். மறுமணம் சார்ந்த விஷயங்களில் ஆலோசனைகளைப் பெறவும். பணி நிமிர்த்தமான பயணங்கள் சாதகமாகும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் அனுபவம் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்


புனர்பூசம் :  மகிழ்ச்சியான நாள்.

பூசம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

ஆயில்யம் : அனுபவம் மேம்படும்.
---------------------------------------


சிம்மம்

டிசம்பர் 14, 2023



தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். அரசு சார்ந்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தநிலை குறையும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். வரவு மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்


மகம் : ஈடுபாடு உண்டாகும்.

பூரம் : அனுசரித்துச் செல்லவும்.

உத்திரம் : வாய்ப்புகள் ஏற்படும்.
---------------------------------------


கன்னி

டிசம்பர் 14, 2023



வியாபாரத்தில் லாபம் மேம்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். தந்தை பற்றிய எண்ணங்கள் மேம்படும். ஆதரவு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



உத்திரம் : லாபம் மேம்படும்.

அஸ்தம் :  அதிஷ்டகரமான நாள்.

சித்திரை : நெருக்கடிகள் குறையும்.
---------------------------------------


துலாம்

டிசம்பர் 14, 2023



சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். தடைபட்ட பணிகளைச் செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். காப்பீடு துறைகளில் பொறுமையுடன் செயல்படவும். புதிய முதலீடுகள் தொடர்பான எண்ணங்களில் தகுந்த ஆலோசனைகளைப் பெறவும். நெருக்கடியான சில சூழல் மறையும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


சித்திரை : குழப்பம் விலகும்.

சுவாதி : பொறுமை வேண்டும்.

விசாகம் : முன்னேற்றமான நாள்.
---------------------------------------


விருச்சிகம்

டிசம்பர் 14, 2023



கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். கூட்டாளிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். தனவரவுகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். புதிய முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நட்பு மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்


விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.

அனுஷம் : நம்பிக்கை பிறக்கும்.

கேட்டை : அறிமுகம் உண்டாகும்.
---------------------------------------


தனுசு

டிசம்பர் 14, 2023



ஆரோக்கியம் பற்றிய ஆலோசனைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். பணிவு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்


மூலம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

பூராடம் : சிந்தனைகள் மேம்படும்.

உத்திராடம் : மாற்றம் உண்டாகும்.
---------------------------------------


மகரம்

டிசம்பர் 14, 2023



எதிலும் நிதானத்துடன் செயல்படவும். படிப்பில் மந்தநிலை உண்டாகும். சுபச்செலவுகளால் கையிருப்பு குறையும். ஆடம்பரமான சிந்தனைகளைக் குறைத்துக் கொள்ளவும். மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்குத் தெளிவான முடிவு கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் மேம்படும். அலட்சியப் போக்குகளைத் தவிர்க்கவும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்


உத்திராடம் : நிதானத்துடன் செயல்படவும்.

திருவோணம் : முதலீடுகள் மேம்படும்.

அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------


கும்பம்

டிசம்பர் 14, 2023



சுப முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். உழைப்பிற்கேற்ற உயர்வு உண்டாகும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். பொதுமக்கள் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு அதிகரிக்கும். உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்


அவிட்டம்: முன்னேற்றம் ஏற்படும்.

சதயம் : உயர்வு உண்டாகும்.

பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------


மீனம்

டிசம்பர் 14, 2023



எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். சுப முயற்சிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். திட்டமிட்ட பணிகளில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். வழக்கு விஷயத்தில் பொறுமை வேண்டும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்களைச் செய்வீர்கள். உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு  

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.

உத்திரட்டாதி : திருப்பங்கள் உண்டாகும்.

ரேவதி : புரிதல் மேம்படும்.
---------------------------------------

ராசிபலன் 14-12-2023 வியாழக்கிழமை