dark_mode
Image
  • Saturday, 11 July 2026

ராசிபலன் 12-07-2026 ஞாயிற்றுக்கிழமை

ராசிபலன் 12-07-2026 ஞாயிற்றுக்கிழமை

ராசிபலன் 12-07-2026 ஞாயிற்றுக்கிழமை

மேஷம்
ஜூலை 12, 2026

போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். காதணிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். கைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : ஆர்வம் அதிகரிக்கும்.
பரணி : ஒத்துழைப்பு மேம்படும்.
கிருத்திகை : மேன்மை உண்டாகும்.

---------------------------------------


ரிஷபம்
ஜூலை 12, 2026

பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். கல்வியில் சாதகமான சூழல் அமையும். பொன் பொருள்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தருணங்கள் அமையும். தொழில் சம்பந்தமான பயணங்கள் கைகூடும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.
ரோகிணி : சாதகமான நாள்.
மிருகசீரிஷம் : பயணங்கள் கைகூடும்.

---------------------------------------


மிதுனம்
ஜூலை 12, 2026

பழைய சிந்தனைகளால் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை அறிந்து செயல்படவும். பேச்சுகளில் கனிவு வேண்டும். பணிபுரியும் இடத்தில் மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். கடன் தொடர்பான சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : சோர்வுகள் உண்டாகும்.
திருவாதிரை : கனிவு வேண்டும்.
புனர்பூசம் : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------


கடகம்
ஜூலை 12, 2026

மறைமுக எதிர்ப்புகள் மூலம் இழுபறிகள் தோன்றி மறையும். உடன் இருப்பவர்கள் பற்றிய புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும். உத்தியோகத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிகப்பு நிறம்

புனர்பூசம் : இழுபறிகள் மறையும்.
பூசம் : அனுபவங்கள் கிடைக்கும்.
ஆயில்யம் : பொறுப்புக்கள் அதிகரிக்கும்.

---------------------------------------


சிம்மம்
ஜூலை 12, 2026

சபை பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பயணங்கள் மூலம் புதிய அனுபவங்களும், மாற்றங்களும் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

மகம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
பூரம் : மாற்றங்கள் உண்டாகும்.
உத்திரம் : கவலைகள் நீங்கும்.

---------------------------------------


கன்னி
ஜூலை 12, 2026

உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலை உண்டாகும். எதிர்காலம் தொடர்பான தெளிவுகள் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் இழுபறிகள் அகலும். தொழில் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். யாகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். நிர்வாக துறைகளில் அதிகாரம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

உத்திரம் : மாற்றமான நாள்.
அஸ்தம் : இழுபறிகள் அகலும்.
சித்திரை : அதிகாரம் மேம்படும்.

---------------------------------------


துலாம்
ஜூலை 12, 2026

சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். தான தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். விலகி சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் கிடைக்கும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். கௌரவ பொறுப்புக்கள் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : மேன்மை ஏற்படும்.
சுவாதி : நெருக்கடிகள் குறையும்.
விசாகம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------


விருச்சிகம்
ஜூலை 12, 2026

உயர் அதிகாரிகள் இடத்தில் அளவுடன் இருக்கவும். குடும்ப உறுப்பினர்களால் மன வருத்தங்கள் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணை வழியில் அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

விசாகம் : வருத்தங்கள் நீங்கும்.
அனுஷம் : விழிப்புணர்வு வேண்டும்.
கேட்டை : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------


தனுசு
ஜூலை 12, 2026

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் உண்டாகும். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சுப காரியங்களுக்கான எண்ணங்களில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்

மூலம் : நெருக்கம் உண்டாகும்.
பூராடம் : அறிமுகம் உண்டாகும்.
உத்திராடம் : வெற்றி கிடைக்கும்.

---------------------------------------


மகரம்
ஜூலை 12, 2026

உடனிருப்பவர்களின் தன்மைகளைப் புரிந்து கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த இழுபறி குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சினைகள் குறையும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகளால் நெருக்கடிகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : இழுபறி குறையும்.
திருவோணம் : பிரச்சினைகள் குறையும்.
அவிட்டம் : நெருக்கடிகள் குறையும்.

---------------------------------------


கும்பம்
ஜூலை 12, 2026

வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும். கற்பனை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
சதயம் : ஆதாயம் உண்டாகும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------


மீனம்
ஜூலை 12, 2026

வியாபார பயணங்களில் புதுமையான சூழல் ஏற்படும். உயர்கல்வி தொடர்பான குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சமூகப் பணிகளில் பொறுப்புணர்ந்து செயல்படவும். வாசனை பொருள்கள் மீதான ஆர்வம் ஏற்படும். எண்ணியதை வெளிப்படுத்துவதில் சிந்தித்து செயல்படவும். வெளியூர் பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். உடன் இருப்பவர்கள் மூலம் மாறுபட்ட அனுபவங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : புதுமையான நாள்.
உத்திரட்டாதி : பொறுப்புணர்ந்து செயல்படவும்.
ரேவதி : அனுபவங்கள் கிடைக்கும்.

---------------------------------------